இனியும் நாட்டு மக்களை எவராலும் ஏமாற்ற முடியாது: கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது

தமது ஆட்சியில் மத கலசாரங்கள் பேணிபாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் முதலாவது பொதுக்கூட்டம்  தங்காலையில் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்வதற்கு தேசிய மட்டத்திலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி தொடர்பாக இன்று பலர் வீண்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பலர் அரசியல் பதவிகள் மற்றும் தனிப்பட்ட லாபம் கருதி கட்சித்தாவல்களில் ஈடுப்பட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவாக இருந்தாலும் அல்லது வேறு எந்தவேட்பாளர்களாக இருந்தாலும் எத்தகையை கூட்டணிகள் அமைத்தாலும் நாட்டு மக்களை ஏமாற்றமுடியாது.

பொதுமக்கள் இன்று தேசிய மக்கள் சக்தியுடன் உள்ளனர்” என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button