கவிதைகள்

சிலுவைகளை இறக்கிய கரங்கள்….கவிதை… அம்பிகா

துயர் கடக்க இயலாத நாளில்
முனுமுனுக்கும்
உன் பெயரைக் கொத்தி
விழுங்குகிறது இதழ்கள்..
ஜென்மத்திற்கான
பசி தீர்த்து விடுகிறது
தொண்டைக்குழி வழி
மெல்ல இறங்கும் பெயர் ..
சூரியன் வருகையால்
புல் சுமந்த ஒரு துளி நதி
மெல்ல கரைகிறது..
அந்நொடியில்
சிலுவைகளை இறக்கிய கரங்கள்
நினைவுக்கு வரலாம்..
உதிரம் கசிய தனித்திருக்கிறது
இதயத்தில் அடித்த ஆணிகள் ..
கைக்கெட்டும் தூரம் தான்
கடலும் ,வாழ்வும் ..
எதையும் கடப்போமென
இதயத்தின் உள்ளிருந்து
ஒலிக்கும் உன் குரல் மட்டுமே என்னை
மீண்டும் மீண்டும் வாழ்விக்கிறது..
ஆதலின் தடாகம்நிறைக்கிறது
உன் வாசம் நிறை உயிர் பூக்கள்…
-அம்பிகா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *