கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த இருவர் கைது!

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 18,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த சீங்கேரி கூட்ரோடு அருகே உள்ள
வீட்டில் சட்டவிரோதமாக கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினம்
கண்டறிந்து, பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்வதாக சுகாதாரம்
மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்திக்கு ரகசிய தகவல்
கிடைத்தது.

இதையடுத்து இணை இயக்குநர் சாந்தி, மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவனர் சீங்கேரி கூட்ரோடு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சாலையோரம் இருந்த வீட்டில் கர்ப்பிணி பெண்கள் செல்வதை கண்காணித்தவர்கள் உள்ளே சென்று பார்த்த போது 4 பேர் கொண்ட குழுவினர் கர்ப்பிணிகள் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்தது தெரிய வந்தது.

மருத்துவ குழுவினரை கண்டதும் இருவர் தப்பி ஓடி தலைமறைவாகினார். மற்ற இருவரை பிடித்து விசாரித்ததில் தருமபுரி இலக்கியம் பட்டியை சேர்ந்த கற்பகம் (39) வெண்ணாம்பட்டியை சேர்ந்த வடிவேல் (40), என்பதும் தப்பியோடியவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திருமலை (40) ஜோதி (37) என்பதும் தெரிய வந்தது.

அவர்களிடமிருந்த ஸ்கேன் செய்யும் கருவி, மருந்துகள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய்
ரொக்கம் பறிமுதல் செய்து இருவரையும் அந்த மருத்துவ குழுவினர் மகேந்திர மங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மகேந்திரமங்கலம் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும், தப்பி ஓடி தலைமறைவானர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button