கவிதைகள்

சிறந்த ஓவியன்…. கவிதை…லி.கான்

அவன் மிக சிறந்த ஓவியன்
பார்ப்பவைகளை எல்லாம்
தத்ரூபமாக வரைபவன்

இவ்வளவு ஏன்
நீங்கள் காண நினைக்கின்ற
கற்பனைகளை கூட
தன் ஓவியத்தால்
கண் முன் கொண்டு வருபவன்

அப்படி பட்டவன்
தூரிகைகளின்
கேலி கிண்டலுக்கு உள்ளானான்
ஆம் அவளை அவனால்
கண் கொண்டும் காண முடிவதில்லை

தூரிகை கொண்டும்
வரைய முடிவதில்லை
ஓவியங்களை எல்லாம்
ஓவியமாய் வரைய முடியுமா என்ன?!

லி.கான்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *