தமிழ்நாட்டில் ஏலியனுக்கு கோவில்!: ஓலைச்சுவடிகளில் இருக்கும் ரகசியம்…. பூசகராக மாறிய நபர்

தமிழர்கள் அதிகமாக வாழும் சேலத்தில் ஏலியனுக்கு கோவிலில் சிலை அமைக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரில் லோகநாதன் என்பவர் வசித்து வருகின்றார்.

இவர் தனது தோட்டத்தில் ஸ்ரீ சிவ கைலாய ஆலயம் என்ற பெயரில் கோவில் கட்ட எண்ணியுள்ளார்.

Oruvan

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டும் பணியைத் துவங்கியுள்ளார்.

முதற்கட்டமாகப் பஞ்சமி வராகி ( விஷ்ணுவின் பன்றி அவதாரம்) சிலை அமைத்து பூஜை செய்து வருகிறார்.

இதன் அருகில் தரைதளத்தில் லிங்கம் சிலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதன் கீழ் பகுதியில் தியான அறை அமைத்துள்ளார்.

இந்த தியான அறையில் ஆகாயத்தில் பறந்து செல்லும் அகத்தியர் போன்ற சிலையும், ஏலியன் சிலை ஒன்றையும் அமைத்துள்ளார்.

Oruvan

அப்பகுதியில் இருப்பவர்களுக்கே இந்த கோவில் பற்றி பெரிதாக எதுவும் தெரியாத நிலையில், சமூக வலைத்தளங்களில் சேலத்தில் ஏலியன் கோவில் என வைரல் ஆகி வருகிறது.

10ஆம் வகுப்பு வரை படித்துள்ள லோகநாதன், சில ஆண்டுகளுக்கு முன்பு காபி பார் ஒன்றை நடத்தி வந்ததாகவும், அப்போது தனக்கு ஏற்பட்ட கால் வலி காரணமாக, சித்தர் பாக்யா என்பவரைச் சந்தித்து சிகிச்சை பெற்றதாகத் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அவருடைய சீடராக மாறியதாகவும், தன்னுடைய பெயரையும் சித்தர் பாக்யா என மாற்றிக் கொண்டு, குருநாதரின் வழிகாட்டுதலின்படி இந்த ஆலயத்தை அமைக்க முடிவு செய்ததாகவும் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

Oruvan

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த கோவில் கட்டும் பணி நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலைச்சுவடிகளில் ஏலியன் பற்றி சித்தர்கள் எழுதி வைத்துள்ளதாகவும், நான் பேசுவதைப் பார்த்து பைத்தியக்காரன் என்று நினைத்தாலும், எதிர்காலத்தில் அனைவரும் ஏலியனை வழிபடுவார்கள் எனவும் ஏலியன் கோவில் குறித்து லோகநாதன் குறிப்பிட்டுள்ளார்.

அண்டவெளிக்கு சென்று ஏலியன் குறித்த ஆராச்சிகள் நடக்கும் இந்த காலத்தில் ஏலியனுக்கு கோவில் அமைத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button