கவிதைகள்

என் தேடல் நீயடா…. கவிதை… உஷாராணி

அந்தி பொழுதில்
அலைபாய்கின்றன விழிகள்…!
முந்தி நின்றே
கொல்கின்றன நினைவுகள்…!
கொஞ்சி பேசிடும்
உன்னழகு வதைக்கிறது…!

விஞ்சிய காதலால்
தடுமாறுகிறது மனது…!
கெஞ்சிக் கேட்கிறேன்
வந்துவிடு என்முன்னே…!
மிஞ்சிய நாட்களில்
நீதானடா என்னுயிர்…!
தேடித் தேடியே
தொலைந்து போகிறேன்…!

தேடல் நீயென்றே
ஆனாயடா என்றும்…!
கண்ணீரில் திளைக்கும்
கண்களைப் பாரடா…!
காணும் காட்சிகள்
யாவும் நீயடா…!

மங்கையிவள் வதனம்
வாடும் முன்னே…!
மணங்கொள்ள மனமுவந்து
வந்து சேரடா…!

உஷாராணி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *