மருத்துவ உலகில் புதிய சாதனை: மனிதனுக்கு இயந்திர இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்
இதய நோயாளிகளுக்கு செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சையில் டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் (THI) விஞ்ஞானிகள் சாதனைப்படைத்துள்ளனர்.
“டைட்டானியம்-கட்டமைக்கப்பட்ட” இதயத்தைப் பயன்படுத்தி உள்வைப்பை மேற்கொண்டு மனிதனுக்கு பொருத்தியுள்ளனர்.
மருத்துவ உலகின் மிக பெரிய சாதனையாக இது பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) மேற்பார்வையிடப்பட்ட ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வின் ஒரு பகுதியாக இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
இதயம் “டைட்டானியத்தால் கட்டமைக்கப்பட்ட பைவென்ட்ரிகுலர் ரோட்டரி இரத்த பம்ப் ஆகும்.
இது ஒற்றை நகரும் பகுதியைக் கொண்டது. இது இரத்தத்தை பம்ப் செய்யும் மற்றும் செயலிழக்கும் இதயத்தின் இரண்டு வென்ட்ரிக்கிள்களையும் மாற்றும் ஒரு காந்த சுழலியைப் கொண்டுள்ளது.
புதிய செயற்கை இதயம் படைத்து டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் சாதனை இந்த புதிய செயற்கை இதயம் பிவாகோர் நிறுவனத்தின் பெய்லர் என்ற அறுவை சிகிச்சை நிபுணர்களால் பொருத்தப்பட்டது.
2024 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி, 57 வயதான ஒருவர், இறுதி நிலை இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு முழுக்க முழுக்க செயற்கையான மாக்லேவ் இதயம் பொருத்தப்பட்டது.
இதுபோல செயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் நோயாளி இவரே ஆவார்.
இந்த செயற்கை இதயமானது ‘கடுமையான பிவென்ட்ரிகுலர் இதய செயலிழப்பு அல்லது யூனிவென்ட்ரிகுலர் இதய செயலிழப்பு உள்ள நோயாளிகளுக்கு இடது வென்ட்ரிகுலர் அசிஸ்ட் டிவைஸ் சப்போர்ட் பரிந்துரைக்கப்படாத நிலையில்’ செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருபாலருக்கும் பொருத்தலாம்
பெய்லரால் தயாரிக்கப்பட்ட டைட்டானியம் செயற்கை இதயம், (TAH) – 1.4m2 உடல் பரப்பளவைக் கொண்டுள்ளதாக பிவாகோர் இணையதளம் அறிவித்துள்ளது.
இது ‘பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்’ ஏற்றது மற்றும் ‘வயதான ஆணுக்கு உடற்பயிற்சி செய்யும் போது போதுமான இதய வெளியீட்டை வழங்கும் திறன் கொண்டது என்றும் அந்த இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படையில், இந்த சாதனம் ‘இதயம் செயலிழந்தவர்களின் இதயத்தின் இரண்டு வென்ட்ரிக்கிள்களையும் மாற்றுகிறது’.
மேலும் ஒரு புதிய இதயத்திற்காக காத்திருக்கும் நோயாளியின் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பை மேம்படுத்தி உடலைச் சுற்றி இரத்தத்தை செலுத்துகிறது.
![]()