பலதும் பத்தும்

AI ஒரு மறைமுக உதவியாளர் மட்டுமே

AI மனிதர்களை மாற்றிவிடுமா?

நிச்சயமாக மாற்றாது. AI என்பது மனிதர்களின் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும் ஒரு மறைமுக உதவியாளர் மற்றும் சக்திவாய்ந்த கருவி மட்டுமே.

AI (செயற்கை நுண்ணறிவு) என்பது பல விஷயங்களைக் கற்றுக் கொண்டு, மனிதர்களைப் போல பணிகளைச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு நவீன கணினி தொழில்நுட்பமாகும்.

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் உணராமலேயே பல வழிகளில் AI உதவி வருகின்றது.

கூகுள் சேர்ச் மூலம் தேவையான தகவல்களை விரைவாகத் தருவதற்கும், கூகுள் மெப்ஸ் மூலம் போக்குவரத்து நெரிசலைக் கணித்து எளிதான பாதையைக் காட்டுவதற்கும் பயன்படுகின்றது.

ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எளிதாக மொழிபெயர்க்கவும், நமது ரசனைக்கு ஏற்ப பாடல்கள் மற்றும் ஓன்லைன் ஷொப்பிங் பொருட்களைப் பரிந்துரைக்கவும் உதவுகின்றது.

அதுமட்டுமன்றி நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய மருத்துவர்களுக்கும், சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து ஓன்லைன் மோசடிகளைத் தவிர்க்க வங்கிகளுக்கும் துணைபுரிகின்றது.

மண்ணின் தன்மை, வானிலை போன்றவற்றை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழிகாட்டுவதோடு வெள்ளம் அல்லது புயல் போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கணிக்க உதவுகின்றது.

 

மின்னஞ்சலில் வரும் தேவையற்ற ஸ்பேம் மெயில்களை வடிகட்டுகிறது, வாடிக்கையாளர் கேள்விகளுக்குப் பதிலளிக்க ‘Chatbots’ ஆகச் செயல்படுகிறது, மங்கலான பழைய புகைப்படங்களைத் தெளிவாக்குகிறது மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்குப் பேச்சை எழுத்தாக மாற்ற உதவுகிறது.

 

அன்பு, இரக்கம், பொறுப்பு, ஒழுக்கம் போன்ற மனித உணர்வுகளுக்கு AI ஒருபோதும் மாற்றாக முடியாது. சிந்தித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும். தொழில்நுட்பத்தை அறிவோடும் அளவோடும் பயன்படுத்தினால், AI நமக்கு ஒரு போட்டியாளன் அல்ல, சிறந்த ‘நண்பன்’ ஆவான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button