நாசாவுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி: முக்கிய திட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு
அமெரிக்க விண்வெளி மையமான நாசா, நிலவின் தென் துருவ மேற்கு முனையில், நோபில் கிரேட்டர் என்ற பகுதியில் நீர், பனிக்கட்டிகள் இருக்கிறதா? என்ற ஆய்வை மேற்கொள்ள முடிவு செய்திருந்தது.
சுமார் 433.5 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் வைபர் ரோவர் என்ற திட்டத்தின் மூலம் ரோவரொன்று நிலவுக்கு அனுப்பப்படும் என நாசாவால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ரோவர் மற்றும் லேண்டரை நிலவில் தரையிறக்குவதில் ஏற்பட்ட கால தாமதத்தினால், இத் திட்டம் 2025ஆம் ஆண்டுதான் முழுமையடையும் எனவும் இதற்கு கூடுதலாக 176 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாலும் இத் திட்டத்தை கைவிடப் போவதாக நாசா அறிவியல் திட்ட இயக்குநர் நிக்கோலா பாக்ஸ் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு அமெரிக்க அரசால் நாசாவுக்கென ஒதுக்கப்பட்ட நிதி 24.875 பில்லியன் டொலர்களே. இது கடந்த வருடத்தைப் பார்க்கிலும் 2 சதவீதம் குறைவு.
இதன் காரணமாக திட்டமிட்ட சில விடயங்களை செய்வதில் பாதிப்பு ஏற்படுவதோடு, ஆய்வுக்கான வேகமும் குறையும் என்பது கவலையளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.
![]()