ஆறடி பாம்பை அசால்ட்டாக பிடித்த பெண்; வைரலாகும் காணொளி

அலுவலகத்தில் புகுந்த பாம்பினை பெண் ஒருவர் எளிதாக பிடிக்கும் காணொளி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. இந்தியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அலுவலகத்தில் பாம்பு புகுந்ததும் அங்கிருந்த ஊழியர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முதல் நடவடிக்கையாக, பாம்பு பிடிக்கும் பெண் ஒருவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார்.

பாம்பு பிடிப்பதில் நிதானத்தையும், நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்திய அந்தப் பெண், மேசையை மெதுவாக அணுகி, கணினிக்குப் பின்னால் மறைந்திருந்த பாம்பைக் கண்டுபிடித்தார்.

பயத்தின் சுவடு சிறிது கூட இல்லாமல், திறமையாக பாம்பைப் பிடித்த அந்தப் பெண், அதை எளிதாக வெளியே இழுத்தார்.

பாம்பை பத்திரமாக பிடித்தப் பிறகு, அங்கு கூடியிருந்த பார்வையாளர்களுக்கு இதுவொரு சாதாரண எலிகளைப் பிடிக்கும் பாம்பு என்றும், மனிதர்களுக்கு இது எந்த அச்சுறுத்தலும் ஏற்படுத்தாத விஷமற்ற இனம் என்றும் விளக்கம் கொடுத்தார்.

பின்பு பாம்பு பிடிப்பவர் கவனமாக பாம்பை ஒரு சாக்குப் பையில் அடைத்து, அதை பாதுகாப்பான சூழலுக்கு மாற்றுவதற்கு தயார் செய்தார்.

அந்தச் சூழலையும், பாம்பையும் சுமூகமாகக் கையாண்டதை பார்த்து, அந்தப் பெண்ணை அங்கிருந்த பலரும் மனமார பாராட்டி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button