செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை
முந்தைய காலத்தில் நுண்ணுயிரிகள் வாழ்ந்ததை வெளிக்காட்டுகிறதா?
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் திகதியன்று செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக விண்கலம் ஒன்றை அனுப்பியது.
குறித்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய அதில் அனுப்பப்பட்ட பெர்சிவியரன்ஸ் என்ற ரோவர் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது.
இந்நிலையில் குறித்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் பழங்கால நதி பள்ளத்தாக்கான நெரெட்வா வாலிஸ்ஸின் வடக்கு விளிம்பு பகுதியை ஆராயும்போது அம்பு முனை வடிவ பாறையை கண்டெடுத்துள்ளது.
அந்த பாறையை ஆய்வு செய்ததில் அதில் வெள்ளை கல்சியம் சல்பேட் நரம்புகள், சிவப்பு நிற நடுத்தர பகுதி மற்றும் சிறிய வெள்ளை பிளவுகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
பல ஆயிரம் கோடி வருடங்களுக்கு முன்னர் நுண்ணுயிரிகள் வாழ்ந்ததை இந்த பாறை வெளிக்காட்டுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
![]()