கோலான் குன்று தாக்குதலிற்கு பதிலடி – லெபனானில் ஹெஸ்புல்ல இலக்குகளை தாக்கியது இஸ்ரேல்

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

கோலன் குன்றுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களிற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

லெபானிற்குள் உள்ளே சென்றும், தென் லெபானிலும் இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளன என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.ஆயுதகளஞ்சியங்கள் உட்பட பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்புகள் இலக்குவைக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன்குன்றுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை ரொக்கட் தாக்கியது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button