அதிகரிக்கும் காட்டு யானைகளின் உயிரிழப்புக்கள்: கடந்த மூன்று ஆண்டுகளில் 283 இறப்புக்கள் பதிவு
இந்தியா, கர்நாடகத்தில் கடந்த 3 வருடங்களில் மட்டும் சுமார் 283 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் 6 யானைகள் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் மட்டும் 6 ஆயிரத்து 395 யானைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
எவ்வளவு தூரம் யானைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதோ, அவ்வளவு தூரம் அதன் உயிரிழப்பும் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 2021 முதல் 2022ஆம் ஆண்டுகளில் 82 யானைகளும் 2022ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டுகளில் 72 யானைகளும், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் 94 யானைகளும், 2024 இல் 35 யானைகளும் உயிரிழந்துள்ளன.
இதில் பெரும்பாலான யானைகள் வயது முதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்துள்ளன. அதற்கடுத்ததாக சில யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளன.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தந்தங்களுக்காக இந்த யானைகள் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
![]()