‘மனதில் இருப்பவரை இப்போது கூறமுடியாது’: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் நியமிக்கப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனது கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன வெற்றிபெறும் நிலையில் இருப்பதாகவும், தாம் மனதில் கொண்டுள்ள வேட்பாளர் யார் என்பதை இப்போது கூற முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
![]()