கவிதைகள்

வண்னத்துப்பூச்சி… கவிதை….முல்லை அமுதன்

வீட்டுத்தோட்டத்திற்குள்
பூத்திருந்த  பூவை மெதுவாக
கொய்தபோதுதான் கண்டேன்..
வண்ணத்துப்பூச்சி ஒன்று
அதில் உறங்கிக்கொண்டிருந்தது.
அதனை சிறைப்படுத்தியிருக்கிறீர்களே!
மனைவி புலம்பினாள்.
தன்னிடமே தந்துவிடுங்கள்.
மகள் கைகளில் ஏந்தினாள் பரிவுடன்.
அன்றைய நாளின் கலவரத்திற்கு
ஒரு சிறிய வண்ணத்துப்பூச்சி காரணமாகியது.
மாலை வெளியிலிருந்து வந்த அப்பம்மா
வீட்டுத்தோட்டத்தின் பூக்களுக்கிடையே
எடுத்துவைத்தாள்.
அன்றைய இரவின் சுமை குறைந்தது..
வண்னத்துப்பூச்சிக்கான விடுதலை கிடைத்தது.
மௌன யுத்தம் வீட்டினுள் தொடரவே செய்தது.
முல்லைஅமுதன்
19/07/2024

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *