ட்ரெக்டருடன் மோதிய பேருந்து: 5 பேர் பலி, 30க்கும் அதிகமானோர் காயம்
இந்தியா, மராட்டிய மாநிலம், டோம்பிலி நகரைச் சேர்ந்த சில பக்தர்கள், கோவில் நிகழ்ச்சி ஒன்றுக்காக பந்தர்பூருக்கு சென்றுகொண்டிருந்தனர்.
குறித்த பேருந்து மும்பை – புனே வீதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ட்ரெக்டர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேருந்தில் மொத்தம் 42 பேர் பயணித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
![]()