மது அருந்திவிட்டு தகராறு செய்த கணவன்; தோசைக் கல்லால் அடித்துக் கொன்ற மனைவி
இந்தியா, மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் – கனிமொழி தம்பதியினர்.
கார்த்திக் வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் சொந்த ஊர் திரும்பினார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் கார்த்திக் குடித்து விட்டு அடிக்கடி கனிமொழியிடம் பிரச்சினை செய்து வந்ததோடு குழந்தைகளையும் சித்திரவதை செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று கார்த்திக் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார்.
இதன் காரணமாக கோபமுற்ற கனிமொழி,கார்த்திக்கை சப்பாத்திக்கட்டை, தோசைக்கல்லால் தாக்கி, அரிவாளாலும் வெட்டியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸாரிடம் குடித்துவிட்டு வந்து குழந்தைகளை கொடுமைப்படுத்தியதால் கணவனை கொலை செய்ததாக கூறியுள்ளார்.
தொடர்ந்து கனிமொழி மீது வழக்குத் தொடர்ந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
![]()