பிரிட்டனில் புதிய பிரதமரால் மகிழ்ச்சியடைந்த கைதிகள்; ஆயிரக்கணக்கானோர் விடுதலை

கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி சிறைகளைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அவற்றுக்குப் போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்றும் புதிய பிரதமர் கியர் ஸ்டாமர் தலைமையின்கீழ் செயல்படும் தொழிற்கட்சி கடந்த காலத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

இந்த நிலையில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தொழிற்கட்சி பிரிட்டிஷ் சிறைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

பிரிட்டனில் உள்ள சில சிறைச்சாலைகள் மிகவும் பழமைவாய்ந்தவை என்றும் அவை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் உள்ளனர். தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த முதல் ஒரு வாரத்திலேயே புதிய சிறைச்சாலை ஒன்றைக் கட்டி முடிக்க முடியாது. இதற்கான நீண்டகால தீர்வு அவசியம்,” என பிரதமர் ஸ்டாமர் கூறியுள்ளார்.

கியர் ஸ்டாமரின் இந்த அறிவிப்பால் விடுதலையாக உள்ள கைதிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், பிரதமருக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button