கோழியை கடித்துக்கொன்ற நடனக் கலைஞர்

இந்தியா, ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் நடன நிகழ்ச்சியொன்று இடம்பெற்றுள்ளது.

நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற நடனக் கலைஞர் ஒருவர் மேடையில் வைத்து கோழியொன்றை உயிருடன் கடித்துக் கொன்றுள்ளார்.

இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவ, விலங்குகள் நல அமைப்பான பீட்டா, குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலிஸில் புகாரளித்துள்ளது.

இந்நிலையில் குறித்த நடனக் கலைஞர் மீது வழக்குப் பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button