பலதும் பத்தும்

காதலனின் காரை 3400 முத்தங்களால் அலங்கரித்த காதலி!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில், தனது காதலனின் காரை உதட்டுச் சாயத்தால் பதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முத்தக் குறியீடுகளால் அலங்கரித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற நிலையில், தற்போது காவல்துறை நடவடிக்கையும் எடுத்துள்ளது.

காதலியின் 3,400 முத்தங்கள்

 

காதலனின் காரின் மீது உதட்டுச் சாயத்துடன் சுமார் 3,400 முத்தக் குறியீடுகளை பதித்ததற்காக, காரின் உரிமையாளரான ஆதித்யா சிகர்வாருக்கு காவல்துறை ரூ.5,500 அபராதம் விதித்துள்ளது. மேலும், காரின் மீது பதிக்கப்பட்டிருந்த அனைத்து முத்தக் குறியீடுகளையும் அழிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காதலனின் காரை 3400 முத்தங்களால் அலங்கரித்த காதலி! காவல்துறை அதிரடி | Gfriend Leaves 3 400 Kiss Bfriends Car Police Fine

கடந்த இரண்டு நாள்களாக, குவாலியர் நகரின் மையப் பகுதியில் உதட்டுச் சாயத்தால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான முத்தக் குறியீடுகளுடன் கார் ஒன்று வலம் வந்தது. இதனைப் பலரும் ஆர்வத்துடன் கவனித்த நிலையில், அந்தக் காரின் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

குறித்த காணொளி காவல்துறையினரின் கவனத்துக்கும் சென்றதைத் தொடர்ந்து, காரின் உரிமையாளரும், அந்த இளம் பெண்ணின் காதலனுமான ஆதித்யா சிகர்வாரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

காதலனின் காரை 3400 முத்தங்களால் அலங்கரித்த காதலி! காவல்துறை அதிரடி | Gfriend Leaves 3 400 Kiss Bfriends Car Police Fine

அப்போது, காரின் தோற்றம் மற்றும் வடிவத்தில் மாற்றம் செய்ததாகக் கூறி, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆதித்யா சிகர்வார் கூறுகையில், “என்னுடைய காதலி சுமார் மூன்றரை மணி நேரம் செலவழித்து காரின் மீது 3,400 முத்தக் குறியீடுகளை பதித்தார்.பின்னர், அதனை விடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்திலும் வெளியிட்டார்.

காதலனின் காரை 3400 முத்தங்களால் அலங்கரித்த காதலி! காவல்துறை அதிரடி | Gfriend Leaves 3 400 Kiss Bfriends Car Police Fine

இவ்வாறு காரை அலங்கரிப்பது சட்டப்படி விதிமீறல் என்பது எனக்குத் தெரியாது. காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, காரின் மீது இருந்த அனைத்து முத்தக் குறியீடுகளையும் அழித்துவிட்டேன்.

மேலும், விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் செலுத்திவிட்டேன். சட்டத்தை மீறும் செயலை ஒருபோதும் யாரும் செய்யக்க்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button