சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடத்தப்படுமா?

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையிலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலோ நடத்த வேண்டுமென இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், இந்தப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதால் இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பாத இந்திய அணி, சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அணியுடனான போட்டியை லாகூரில் நடத்தவுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button