ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை: காரணம் இதுதானா?

திரையுலகைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதும் அது விவாகரத்தில் முடிவதும் ஒன்றும் புதிதல்ல.

அந்த வகையில் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதி.

அண்மைக் காலமாக இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி பரவி வருகிறது.

இந்த செய்தி இப்போது வரையில் வெறும் வதந்தியாகத்தான் இருக்கிறது. காரணம் இரு தரப்பிலுமிருந்து அதிகாரப்பூர்வமாக இதனை ஒப்புக்கொள்ளவுமில்லை. மறுக்கவுமில்லை.

இவர்களின் இந்த விவாகரத்து சர்ச்சைக்கு பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன.

அதில் ஆர்த்தி சினிமாத் துறையில் களமிறங்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆனால், ஜெயம் ரவிக்கு அதில் விருப்பமில்லாததால், ஆர்த்தி திருமண வாழ்க்கையிலிருந்து விலகி வேலையில் கவனம் செலுத்தவுள்ளார் என ஒரு சாரார் கூறுகின்றனர்.

இன்னும் சிலர் ஆர்த்தியின் தாயான சுஜாதாவுக்கு ஷங்கர் எனும் வளர்ப்பு மகன் இருப்பதாகவும் அவரே சுஜாதாவின் தயாரிப்பு பணிகளை கவனித்துக் கொள்வதாகவும், அப்படியொரு கட்டத்தில் ஜெயம்ரவி மற்றும் ஷங்கருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில், சுஜாதா ஷங்கர் சொல்வதை ஜெயம்ரவி கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்தக் கோபம் ஆர்த்தியின் பக்கம் திரும்பியதாலேயே இந்த பிரச்சினை எழுந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் ஆர்த்தி, ஜெயம் ரவி இருவரும் வாய் திறந்தால் தான் சரி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button