சூர்யாவின் 350 கோடி ரூபா பட்ஜெட் படம் கைவிடப்பட்டதா?; பாரிய தொகையை செலவு செய்த தயாரிப்பாளர்

சுமார் 350 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரபல நடிகர் சூர்யா நடிக்கவிருந்த பிரமாண்டப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னிந்திய நடிகர்களில் தவிரக்க முடியாத நடிகர்களில் ஒருவராக சூர்யா மாறியுள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள நிலையில், அவர் தனது அடுத்த படங்களுக்கான பணிகளில் தீவிரம் காட்டியுள்ளார்

நடிப்பு, தயாரிப்பு என பல துறைகளில் கவனம் செலுத்தியுள்ள அவர், தமிழ் மொழிய தாண்டி தற்போது பிற மொழி படங்களிலும் நடப்பதில் தற்போது ஆர்வம் காட்டியுள்ளார்.

இதன்படி, பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவுடன் சூர்யா இணைந்துள்ளதாகவும் இந்தப் படத்திற்கு கர்ணா என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பெரிய பொருட்செலவில் இந்தப் படம் தயாரிக்கப்படவுள்ளது.

ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்திற்கான நடிகர், நடிகைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அலி ஃபசல், விஜய் வர்மா மற்றும் அவினாஷ் திவாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, குறித்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள், லுக் டெஸ்ட் மற்றும் முன்பணம் என 15 கோடி ரூபாய் பணத்தை தயாரிப்பாளர்கள் செலவழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் கனவு படமாக கர்ணா உருவாகிறது. படம் கிடப்பில் போடப்பட்டமைக்கான உண்மையான காரணங்கள் எதுவும் வெளியாககவில்லை.

எக்ஸெல் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா பிலிம்ஸ் ஆகியவை இணைந்து இந்த பிரம்மாண்ட படத்தை தயாரிக்கின்றன.

இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டதாகவும், படத்தை அடுத்த ஆண்டு படத்தை வெளியிடட திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button