பாலியில் இணையக் குற்றம்: தாய்வான் கடவுச்சீட்டுகளை வைத்திருந்த 103 பேர் கைது

பாலியிலிருந்து இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், தாய்வான் கடவுச்சீட்டுகளை வைத்திருந்த 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தபானான் மாவட்டத்திலுள்ள, விடுமுறை கழிக்கும் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் குடிவரவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, நூற்றுக்கணக்கான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட12 பெண்கள் மற்றும் 91 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் பாலியின் டென்பசாரில் உள்ள தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த குழுவிற்கு உள்ள சர்வதேச தொடர்புகள் குறித்து இந்தோனேசியா விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
கைதானவர்களில் 14 பேர் மாத்திரமே தைவானியர்கள் என்று சந்தேகிக்கப்படுவதாக தாய்வானில் உள்ள தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தாய்வானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசியா முழுவதும் இணயக்குற்றத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
![]()