5 வருடங்களில் 81 பொலிஸார் தற்கொலை: மன அழுத்தமும் பதட்டமும் காரணமா?

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடந்த சில வருடங்களாக தற்கொலை செய்துகொள்ளும் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த தகவலானது பொலிஸார் மற்றும் மாநில அரசிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறிருக்க, திருவனந்தபுரம் மாநகர போக்குவரத்து அமலாக்க (வடக்கு) பிரிவில் சிவில் பொலிஸாக கடமையாற்றியவர் மதன குமார்.

இவர், பூந்துறை பகுதியிலுள்ள பொலிஸ் குடியிருப்பில் கடந்த 5 மாதங்களாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மதன குமார் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மதன குமார் இரண்டு நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால், அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரையில் தெரியவில்லை.

கடந்த 5 வருடங்களில் மட்டும் கேரளாவில் 81 பொலிஸார் தற்கொலை செய்து இறந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதிகப்படியான மன அழுத்தம், பதட்டம் போன்ற காரணங்களினால் பொலிஸார் தற்கொலை முடிவை எடுப்பதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்கும் விதத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொடர்ந்தும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button