முச்சந்தி

டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; 13 வயது சிறுவன் கைது

இந்தியாவின் டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் கிழமை, துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக டெல்லி விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன்பின்னர் விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதுடன் சோதனை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

வெடிகுண்டு மிரட்டல் போலியானதென கண்டுபிடிக்கப்பட்டதுடன் கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் முகவரியும் சற்று நேரத்தில் நீக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அந்த மின்னஞ்சல் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் இருந்து அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் மின்னஞ்சல் 13 வயது சிறுவனால் அனுப்பப்பட்டதை பொலிஸார் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செய்தியை பார்த்து தானும் விளையாட்டுக்காக அனுப்பியதாக சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எவ்வாறாயினும் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button