இடைவிடாத செய்திகளால் மக்கள் செய்திகளில் இருந்து விலகி ஓடுகின்றனர்

அதிகளவு மக்கள் செய்திகளில் இருந்து விலகிச்செல்கின்றனர் – என்பது சர்வதேச ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
செய்திகள் மனச்சோர்வை ஏற்படுத்துபவையாகவும் இடைவிடாதவையாகவும் சலிப்பை ஏற்படுத்துபவையாகவும் காணப்படுகின்றன என ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பத்தில் நால்வர்(39) தாங்கள் செய்திகளில் இருந்து விலகிச்செல்வதாக குறிப்பிட்டுள்ளனர் என ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் ரொய்ட்டர் நிறுவகம் தெரிவித்துள்ளது.

2017 இல் இவ்வாறான ஆய்வொன்று இடம்பெற்றவேளை அதில் கலந்துகொண்டவர்களில் 29 வீதமானவர்கள் தாங்கள் செய்திகளை தவிர்ப்பதாக தெரிவித்திருந்தனர்.
மத்திய கிழக்கு உக்ரைன் யுத்தம் காரணமாக மக்கள் செய்திகளை கைவிடும் நிலையேற்பட்டிருக்கலாம் என ஆய்வறிக்கையை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு செய்திகளை தவிர்ப்பது அதிகமாக காணப்படுகின்றது என சர்வதே ஆய்வினை முன்னெடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வருடம் ஜனவரி பெப்ரவரி மாதங்களில் 47 நாடுகளை சேர்ந்த 94இ943 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளே வெளியாகியுள்ளன.
உலகின் பல நாடுகளில் பில்லியன் கணக்கான மக்கள் தேர்தலில் வாக்களிக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா உட்பட சில நாடுகளி;ல் தேர்தல்கள் காரணமாக செய்திகள் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளமை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும் இது ஒரு சிறிய மாற்றமே- செய்திகளை வாசி;ப்பவர்கள் பார்ப்பவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதையே இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
செய்திகளில் அதிகளவு அல்லது தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக 47 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.2017 இல் இது 63 வீதமாக காணப்பட்டது.
பிரிட்டனில் செய்திகள் குறித்த ஆர்வம் 2015ம் ஆண்டின் பின்னர் அரைவாசியாக குறைவடைந்துள்ளது.
செய்திக்கான நிகழ்ச்சிநிரலை உருவாக்குவது மிகவும் சவாலான விடயமாக காணப்படுகின்றது என அறிக்கையை தயாரித்தவர்களில் முக்கியமானவரான நிக் நியுமன் தெரிவித்துள்ளார்.
உலகம் பெருந்தொற்றை எதிர்கொண்ட இதன் காரணமாக செய்திகளில் இருந்து விலகுவதே மக்களின் இயல்பான செயற்பாடு என குறிப்பிட்டுள்ள அவர் தங்கள் உளநலத்தை பாதுகாப்பதற்காகவும் ஏஞ்சியிருக்கும் வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காகவும் மக்கள் இதனை செய்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
![]()