இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் 307 இஸ்ரேலிய வீரர்கள் பலி: ரஃபாவில் வீடுகள் இடித்துத் தரைமட்டம்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் இஸ்ரேலிய வீரர்கள் 10 பேர் கொலை செய்யப்பட்டதையடுத்து தெற்கு ரஃபாவில் இஸ்ரேலியப் படைகள், பல வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர்.

இஸ்ரேலியப் படைகள் பயணித்த வாகனம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து இஸ்ரேலின் மற்றுமொரு பெரிய இழப்பு என கூறப்படுகின்றது.

ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி தெற்கு காசாவில் ஹமாஸ் போராளிகள் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா மீதான இஸ்ரேலின் போர் தொடரும் என ஆவேசமாக கூறியுள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பமானதிலிருந்து இதுவரை 307 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னரான காசாவில் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் சுமார் 28 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் உள்ள 50,000 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடி சிகிச்சை தேவை என்று பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button