முச்சந்தி

காசாவுக்கு மீண்டும் மனிதாபிமான உதவிகள்: 1.1 மில்லியன் பவுண்ட்ஸ் வழங்கியது அமெரிக்கா

பலஸ்தீனியர்களுக்கு கடல் வழியாகப் பொருட்களைக் கொண்டு செல்லும் முயற்சியில் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து, அமெரிக்காவால் பழுதுபார்க்கப்பட்ட கப்பலிலிருந்து காசாவுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது.

அமெரிக்க இராணுவத்தால் பழுதுபார்க்கப்பட்ட கப்பல், கடந்த மே 25ஆம் திகதியன்று பலத்த காற்றினால் பாதிப்புக்குள்ளாகுவதற்கு முன்பு சுமார் ஒரு வாரம் மட்டுமே செயல்பட்டது.

இந்நிலையில் கப்பலின் சேதமடைந்த பகுதிகள் இஸ்ரேலிய துறைமுகத்தில் பழுதுபார்க்கப்பட்ட பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் காசா கடற்கரையுடன் இணைக்கப்பட்டது.

சுமார் 1.1 மில்லியன் பவுண்ட்ஸ் கடந்த சனிக்கிழமை உதவியாக வழங்கப்பட்டதாக CENTCOM அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏஜென்ஸியின் கூற்றுப்படி, மே நடுப்பகுதியில் மொத்தம் 3.5 மில்லியன் பவுண்ட்ஸ் உதவியாக வழங்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button