கவிதைகள்

“நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்கட்டும்” …. கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.

இளவயதில் கேட்ட ஒரு சொலவடைஇன்றேன் நினைவில் வருகிறதுஒரு நாளும் பிடிசோறு போடாத உத்தமிஇன்று திருவோடு நிறைய சோறிட்டாள்என்றும் அதிகமாய் சோறுபோடும்செருக்கிக்கு இன்று என்னாயிற்றுஎன்பதே நான் கேட்ட சொலவடையாம்ஒரு பிச்சைக்காரன் சொன்னதாக கேட்டதுவாம்

அந்த பிச்சைக்காரனுக்கு என்னாச்சுசோறிடாதவளுக்கு என்னாச்சுசோறிடுபவளுக்கும் என்னதான் ஆச்சுசோறிடாதவள் அதிகம் சோறிட்டதோசோறிடுபவள் சுகமில்லையென கேட்டுஅவள் சோறுபோட முடியா நிலையறிந்தேபிச்சைக்காரன் தன்னை புகழ்ந்திடவேஅந்த பிச்சைக்காரனுக்கும் சோறிட்டாள்உண்மை நிலையினை நாமறிவோம்என்றுமே சோறிடாதவள் சோறிட்டதும்பிச்சைக்காரன் மேலான பாசத்தாலன்றுபிச்சைக்காரன் சோறிடாதவளை புகழ்ந்ததும்சோறிட்டவளை இகழ்ந்ததும்உண்மையல்ல என்பதையும் நாமறிவோம்சோறிடாதவளை புகழ்ந்தால் இனியாவது சோறிடுவாள்என்பது பிச்சைக்காரனின் நப்பாசைசோறிட்டவளை இகழ்ந்தாலும் அந்த உத்தமி செருக்கியாக மாட்டாள் என்றறிவான்பிச்சைகாரனுக்கு சோறே குறி என்பதையும் நாமறிவோம்எது எப்படியோ பிச்சைக்காரனுக்கு சோறு கிடைக்கட்டும்சோறிடாதவள் மனமும் குளிரட்டும்சோறிடுபவளும் சுகமாகி வந்து சோறிடட்டும்நமக்கும் சொலவடை பொருள் புரியட்டும்நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்கட்டும்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *