தாயின் நீண்டநாள் போராட்டம்: நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட யாழ். இளைஞனின் சடலம்

துபாயில் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவரின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த (27.04.2023) ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சடலம் நேற்றையதினம் (25.05.2023) அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2022ஆம் ஆண்டு வேலைவாய்ப்பிற்காக துபாய்க்கு சென்றுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என சந்தேகிக்கப்பட்ட நிலையில் இது ஒரு தற்கொலை என துபாய் நாட்டு மருத்துவர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட கொலை

இந்நிலையில் நேற்றுமுன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த சடலத்தை பரிசோதித்த பொலிஸாரும் மருத்துவர்களும் இது ஒரு கொலை எனவே சடலத்தை உடனடியாக வழங்க முடியாது எனவும், இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தாயாரின் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் சடலமானது நேற்றையதினம் சுண்டுக்குழியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவரது இல்லத்தில் இன்றையதினம் இறுதிச் சடங்குகள் இடம்பெற்றுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button