இந்தியாவின்புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறும் தமிழ்நாட்டின் ‘செங்கோல்’ – சிறப்புகள் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி திறந்து வைக்கவுள்ள இந்தியாவின்புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் இடம்பெறவுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் செங்கோல் மிக முக்கிய இடம் வகித்தது என்பது தமிழர்களின் பெருமை.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறும் செங்கோலின் சிறப்பு:

இந்தியா சுதந்திரம் பெற்றதற்கான சமிஞ்சையான செங்கோலை மெளண்ட்பேட்டனிடமிருந்து பெற்றது திருவாவடுதுறை ஆதீனத்து கட்டளைத் தம்பிரான் திருஞானசம்பந்த பெருமானின் கோளறு பதிகத்தை ஆதீன ஓதுவார் பாடி முடித்த பின்னரே அந்த செங்கோல் பெறப்பட்டது.

‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’ என்ற திருஞான சம்பந்தரின் பதிகம் ஒலிக்க நாடு சுதந்திரம் பெற்றது. எத்தனையோ மொழிகள் செந்தமிழ் ஒலிக்க நாடு விடுதலை பெற்றது.

சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார்.

நேரு சுதந்திரத்தை அறிவித்து இந்தியர்கள் அரியணை ஏறும் அதிகாரப்பூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள் மதங்களில் பழக்கம் இல்லாதவர். எனவே ராஜாஜியிடம் இதனை தெரிவித்தார்.

ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசிநல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் அன்றைய ஆதீனம் 20-வது மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் அப்போது காய்ச்சலால் அவதியுற்றுக் கொண்டிருந்தார்

எனவே ஆதீனக் கட்டளைத்தம்பிரான் சடைச்சாமி என்றழைக்கப்பட்ட ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரான் ஓதுவார் ஒருவரையும் ஆதீன நாதஸ்வரம் வித்வான் ” நாதஸ்வர சக்கரவர்த்தி ” திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையையும்  டெல்லிக்கு தனிவிமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடாயிற்று.

அன்றைக்கு பிரபலமாயிருந்த சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச்சின்னம் பொறித்த தங்க செங்கோல் செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 15ஆம் நாள் நள்ளிரவில் மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை திருவாவடுதுறை இளைய ஆதீனம் தம்பிரான் பெற்றார். செங்கோலுக்கு புனித நீர் தெளித்து ஓதுவா மூர்த்திகள் ‘வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்’ என்று

தொடங்குகிற தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடிக்கும் போது செங்கோல் நேருவிடம் வழங்கப்பட்டது.

அரசுச் சின்னமாக இருக்க வேண்டிய சுதந்திரச் செங்கோல் இன்று பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் உள்ள நேருவின் இல்லமான ஆனந்தபவனில் கண்ணாடி பேழைக்குள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு முறையும் நாட்டின் ஆட்சிமாற்றத்தின்போது இந்த செங்கோல் முறை கடைபிடிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள இளம் தலைமுறையினர்இ இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளும்வண்ணம் இந்த நிகழ்வு பாடப்புத்தகங்களில் இடம்பெறச்செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button