ஆடையை கழட்ட சொன்னார் டைரக்டர் …! அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பிரியங்கா சோப்ரா …!

தமிழில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து பாலிவுட்டிற்கு சென்ற அவருக்கு, அங்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததால், படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்தியாவில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்தை பிரியங்கா சோப்ரா பெற்று உள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கடந்த 2018-ம் ஆண்டு புகழ்பெற்ற பாப் பாடகரான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸை விட 10 வயது மூத்தவர் ஆவார். இந்த காதல் ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.திருமணத்துக்கு பின்னரும் பிரியங்கா சோப்ரா சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு ஹாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அண்மையில் இவர் நடித்த சிட்டாடல் என்கிற வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வெப் தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா அரை நிர்வாணமாக படுக்கையறை காட்சிகளில் நடித்து அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தார். இதனிடையே சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் இயக்குனர் பற்றி பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.நடிகை பிரியங்கா சோப்ரா சினிமாவில் அறிமுகமான 2002-2003ம் ஆண்டுகளில் நடந்த சம்பவம் அது.

அப்போது பாலிவுட் படமொன்றில் ரகசிய ஏஜெண்ட்டாக நடித்து வந்தாராம். அப்போது ஆண் ஒருவரை வசியம் செய்யும் காட்சி படமாக்கப்பட்டது அந்த காட்சியில் நடிகருடன் நெருக்கமாக நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்புக்கொண்டாலும், அப்படத்தின் இயக்குனர் அவர் உள்ளாடையுடன் மட்டுமே நடிக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். தன்னுடைய ஒப்பனையாளரை அழைத்து என்னுடைய ஆடையை கழற்றி உள்ளாடையை காட்ட சொன்னதாகவும், அதைப்பார்க்க தான் ரசிகர்கள் ஆசைப்படுவார்கள் என்றும் கொச்சையாக பேசி உள்ளார். ஆனால் அவர் என்னிடம் அதைச் சொல்லவில்லை. என் எதிரில் இருந்த ஒப்பனையாளரிடம் சொன்னார். அது மனிதாபிமானமற்ற தருணம். என்னால் எப்படி முடியும் என்பதைத் தாண்டி நான் வேறு எதுவும் இல்லை என்ற உணர்வு. பயன்படுத்தப்படும், என் கலை முக்கியமில்லை, நான் என்ன பங்களிக்கிறேன் என்பது முக்கியமில்லை. என கூறினார். மேலும் இயக்குனரின் விருப்பப்படி உள்ளாடையுடன் நடிக்க மறுத்த பிரியங்கா சோப்ரா. 2 நாட்கள் மட்டுமே நடித்த நிலையில், அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இயக்குனரின் அந்த செயல் தனக்கு மனிதாபிமானமற்றதாக தெரிந்ததாகவும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது வேதனையை பகிர்ந்துள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button