கதைகள்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்!… சிறுகதை …. சங்கர சுப்பிரமணியன்.

திரவப் பொருளின் அடர்த்தியைப் பொறுத்து அளவு மாறுபடும் என்பது கற்றவர்களுக்கு மட்டுமே தெரியும். அதுவும் குறிப்பாக விஞ்ஞானம் கற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் விஞ்ஞான அறிவு வேண்டும்.சான்றாக குறிப்பிட்ட அளவு நிரம்பக் கூடிய கொள்கலத்தில் நிரப்பிய தண்ணீரை  சோதனைக்குழாயில் ஊற்றி அளக்கும் போது ஓர் அளவையும் அதே கொள்கலத்தில் நிரப்பிய பாலை சோதனைக்குழாயில் ஊற்றி அளக்கும்போது மற்றொரு அளவையும் கொடுக்கும். ஆனால் பயன் படுத்திய கொள்கலன் ஒன்றுதான்.இந்த வேறுபாட்டை மாணவர்களுக்கு விளக்க சோதனைச்சாலைக்கு மாணவர்களை அழைத்துச் சென்றார் விஞ்ஞான ஆசிரியர் வேல்சாமி.அவர் முருகன் என்ற மாணவனை அழைத்து,“முருகா உனக்கு கொடுக்கப் பட்டிருக்கும் கொள்கலத்தில் தண்ணீரை நிரப்பி அதை சோதனைக்குழாயில் ஊற்றி அதன் அளவை குறித்துக் கொள்” என்றார்.முருகனும் ஆசிரியர் சொன்னபடியே செய்து சோதனைக்குழாயில் காட்டிய அளவைக் குறித்துக் கொண்டான்.“சார், தண்ணீரின் அளவை சரியாக குறித்துக் கொண்டேன் சார்.”“குறித்துக் கொண்டாயா, நல்லது” என்றவர் இன்னொரு மாணவனை அழைத்தார்.“கரிகாலா, முருகன் பயன்படுத்திய அதே கொள்கலத்தில் பாலை நிரப்பி பின் சோதனைக்குழாயில் ஊற்றி அளவைக் குறித்துக் கொள்” என்றார்.சிறுது நேரம் சென்றது. கரிகாலனும் ஆசிரியர் சொன்னபடியே செய்து அளவைக் குறித்துக் கொண்டபின் ஆசிரியரிடம் தெரிவித்தான்.உடனே ஆசிரியர் மாணவர்களை அழைத்து மாணவர்களே நீங்கள் எல்லோரும் முருகன் செய்ததையும் கரிகாலன் செய்ததையும் சோதனைக்கூடத்தில் பார்த்தீர்கள். இப்போது எல்லோரும் வகுப்பறைக்கு செல்லுங்கள் என்றார்.மாணவர்கள் அனைவரும் வகுப்பறை சென்று அமர்ந்தனர். விஞ்ஞான ஆசிரியரும் வகுப்பறை வந்து நாற்காலியில் அமர்ந்தார்.பின் முருகனைப் பார்த்து அவன் குறித்துக் கொண்ட அளவை போர்டில் எழுதச் சொன்னார். முருகனும் போர்டில் அவனது சோதனையில் கண்ட தண்ணீரின் அளவை எழுதினான்.அதன் பின் கரிகாலனிடமும் அவ்வாறே போர்டில் அவனது சோதனையில் கண்ட அளவை எழுதச் சொன்னார். கரிகாலனும் போர்டில் எழுதி விட்டுச் சென்றான்.அப்போது ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து,“டியர் ஸ்டூடண்ட்ஸ், ஒய் த மெசர்மண்ட்ஸ் ஆர் டிபரண்ட்? என்று கேள்விகேட்டார்.யாருக்கும் பதில் தெரியாததால் எல்லோரும் கோரஸாக “டோன்ட் நோ சார்“என்றனர்.“ஓகே. நௌ வீ ஆர் கொயிங் டு பைண்ட் தேட்”“அன்பிலீவபுள், சார்” என்று எல்லா மாணவர்களும் சேர்ந்து சொன்னார்கள்.“எஸ், எஸ். பட் யுகேவ் சீன் தேட்”“எஸ் சார், வி ஆர் நாட் டினையிங் சார்”என்ன இது சார் இங்கிலீஷ் எல்லாம் பேசறாருன்னு நினைக்காதீங்க நான் ஆசிரியர் வேலைக்கு பயிற்சிக்கு போகும்போது ஒரு பயிற்சியாளர் எனக்கு சொல்லிக் கொடுத்ததைத்தான் இங்கு பயன்படத்தினேன் என்றார்.இதெல்லாம் பயிற்சிப் பாடத்திட்டத்தில் கிடையாது. இருந்தாலும் எனது அனுபவ வாயிலாக நான் பெற்றதை உங்களுக்கு சொல்கிறேன் என்றார்.விஞ்ஞானம் போன்ற பாடத்தை சொல்லிக் கொடுக்கும்போது மாணவர்கள் உள்வாங்க சற்று திணறுவார்கள் அப்போது ஏதாவது குறளிவித்தை செய்து உள்வாங்கும் சக்தியை ஊக்குவிக்க சற்று திசை மாற்றவேண்டும் என்பார்.தமிழ் சினிமாவுல மிடில்ல பாட்டும் சண்டையும் வந்து விடும். எனக்கும் நம்ம படத்த பார்த்ததுல அப்படியே ஒரு ப்ளோவுல வந்துட்டது.எவ்வளவோ மக்கள் பார்க்கிற படத்துலயே டைரக்டர் வேண்டாதவற்றை வைக்கும்போது நான் ஒரு நல்ல செயலுக்காக தமிங்கலத்தகலந்தேன் என்றார். ஒரு நல்லது நடக்கும்னா பொய் சொல்லலாம் என்று வள்ளுவர் சொல்லியிருப்பது போல் நானும் இதை எடுத்துக் கொண்டேன். இருந்தாலும் தப்புதான் என்று கூறினார்.என் நண்பன் சேதுராமனும் வாட் திருவள்ளுவர் சேய்ஸ் இன் செகண்ட் சாப்டர் எபவுட் வான்சிறப்பு என்று பேசுவான். ஆனால் பேரு தமிழரசன் ஊரு மதுரை.கேட்டால் தமிழ்ச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் மதுரை என்பான். எங்களைவிட்டால் தமிழை சுத்தமாகப் பேச ஆள் இல்லை என்பான். இது நல்லதுக்கா என்பது எனக்கு தெரியாது.சரி, இப்போது பாடத்துக்கு வருவோம். அளவில் வேறுபாடு எப்படி உண்டாயிற்றுஎன்று பார்கப் போகிறோம். இந்த சோதனையைச் செய்த முருகனும் கரிகாலனும் சரியாகவே செய்தனர்.இருவரும் தவறு செய்யவில்லை.ஆனால் உங்களில் சிலர் தங்களை சிறந்த அறிவாளிகளாக எண்ணிக் கொண்டு முருகனோ அல்லது கரிகாலனோ இருவரில் ஒருவர் தவறு செய்திருக்க வேண்டும் என்று எண்ணியிருக்கலாம்.அப்படி யாராவது எண்ணியிருந்தால் அதுதான் தவறு. அப்படி எண்ணாமல் இதில் ஏதாவது காரணம் இருக்கும் எண்ணியவர்களும் இருந்திருப்பார்கள்.இதற்குத்தான் வள்ளுவர்,“வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத்தனையது உயர்வு“ என்கிறார்.மனிதர்களின் உயர்வு என்பது அவரவர்களின்மனதைப் பொறுத்தது என்கிறார். தாமரைமலரைத் தாங்கும் தண்டானது நீர்மட்டத்திற்கு ஏற்ப உயரும். அதைப் போன்றே மனிதர்களின் மனதைப்போன்றே உயர்வும் என்கிறார்.ஆதலால் மனிதர்கள் நற்பண்பை வளர்த்துக் கொண்டால் அப்பண்பே அவர்களைஉயர்நிலைக்கு எடுத்துச் செல்லும். ஆதலால் யாரும் யாரையும் உயர்நிலைக்கு எடுத்துச் செல்லவும் முடியாது தாழ்த்தி விடவும்முடியாது என்றார்.ஒருவேளை மற்றவர்கள் தாழ்த்தி விட்டதாக எண்ணினால் அவர்கள் தனக்குள் மகிழ்ச்சியடைந்து கொள்ளலாம். அந்த மகிழ்ச்சி எப்படி இருக்கும் தெரியுமா?இந்தப் பள்ளிக்கூடத்தில் சம்பளத்திற்கு வேலை பார்க்கிறேன். இந்த பள்ளியே என்னுடையது என்று எனக்குள் எண்ணி மகிழ்ந்தால் இதனால் இந்த பள்ளியின்உரிமையாளருக்கு எந்த பாதிப்பும் இல்ல. அது போன்றுதான் இதுவும் என்றார்.ஆனால் ஒருவரின் வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள் மற்றவர்களின்ஆலோசனை பெற்று ரூம் போட்டு யோசித்தாவது மற்றவர்களுக்குகேடு விளைவிப்பதில் ஆர்வம் காட்டுவர்.பூர் பெல்லோஸ். பிட்டி ஆன் தெம். அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் இவை நான்கையும் தெரியாதவர்கள். தெரிந்திருந்தால் ஒரு ஈ, எறும்புக்குக்கூட தீங்குசெய்ய நினைக்கமாட்டார்கள்.இவர்கள் மற்றவர்கள் முன்னேற்றத்தை தடுத்து விட்டால் அவர்கள் முன்னேற்றம் தடைபடும் என்று பூலோகம் இருண்டுவிடும் என்ற எண்ணும் பூனைபோல் கண்ணை மூடிக்கொள்வார்கள்.ஆதலால் நீங்கள் ஔவை சொன்னதுபோல் கற்றோரை நாடவேண்டுமேயன்றி முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம் போல் ஆகிவிடக்கூடது என்றவர் தமிழாசிரியர் பணியை நான் செய்துவிட்டேன். மேற்கொண்டு விளக்கம் தேவைப்பட்டால் அவரிடமே கேளுங்கள் என்றவர்,“மாணவர்களே, இப்போது விஞ்ஞானப் பாடத்துக்கு வருவோம். இந்த இருவர் சொன்ன அளவிலும் தவறில்லை என்றால் அது எவ்வாறு சாத்தியம் என்பதை பார்ப்போம்” என்றார்.இன்றைய பாடம் இடம்மாறு தோற்றப்பிழை. இதில் பலவகையுண்டு. இன்று திரவங்களில் இது எப்படி செயல்படுகிறது எனப்பார்ப்போம். முருகனும் கரிகாலனும் பயன்படுத்திய கொள்கலனும் சோதனைக்குழாயும் ஒன்று என்றாலும் திரவங்கள் வெவ்வேறு.ஒன்று நீர் மற்றொன்று பால். இந்த திரவங்களின் மேற்பரப்பு திரவங்களின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். மனிதர்களின் பண்பைப் பொறுத்து தன்மைகள் வேறுபடுவதைப் போல.அடர்த்தி குறைந்த திரவங்களின் மேற்பரப்பு குழிந்தும் அடர்த்தி அதிகமான திரவங்களின் மேற்பரப்பு குவிந்தும் காணப்படும். இந்த திரவங்களை சோதனைக் குழாயில் விடும்போது அடர்த்தி குறைந்த தண்ணீரின் மேற்பரப்பு குழிந்து இருப்பதால் நீரின் மேற்பரப்பு விளிம்பு சோதனைக்குழாயில் ஒரு அளவை கொடுத்துள்ளது.அதேபோல் சோதனைக்குழாயில் அடர்த்தி கூடிய பாலை விடும்போது அதன் மேற்பரப்பு குவிந்திருப்பதால் பாலின் மேற்பரப்பு விளிம்பு சோதனைக்குழாயில் வேறொரு அளவைக் கொடுத்துள்ளது என்றார்.இந்த வேறுபாட்டை மாணவர்களை மாற்றுவதாலோ சோதனைக்குழாயை மாற்றுவதாலோ சரிசெய்து விடமுடியாது.ஒரே திரவத்தை பயன்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும் என்றார்.இதிலிருந்து என்ன தெரிகிறது என்று மாணவர்களை ஆசிரியர் கேட்க மாணவர்கள் திரவங்களின் அடர்த்தி மாறுபடும்போது அளவும் மாறுபடும் என்று தெரிகிறது என்று மாணவர்கள் பதிலளித்தனர்.“இது விஞ்ஞானப்பாடம் என்றாலும் மனிதர்களுக்கும் இதன்மூலம் ஒரு நீதி சொல்லலாம்” என்றார் ஆசிரியர்.“அது எப்படி?” என்று ஆவலுடன் மாணவர்கள் கேட்டனர். மனிதர்களின் தன்மைகள் மாறுபடும். மனிதரின் இடத்தை மாற்றுவதால் அந்த மனிதரின் தன்மையை மாற்றிவிட முடியாது. கற்றறிந்தவர்களுக்கு மட்டுமேசங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்ற உண்மை புலப்படும். கற்றிருந்தாலும் சிலருக்கு அது புரியாது.கற்றோர் எல்லாம் அறிவாளிகள் அல்ல. ஆதலால் மாணவர்களே நீங்கள் ஏட்டுக்கல்வி மட்டும் போதுமென்று நின்றுவிடாது அறிவாளிகளாகவும் விளங்க வேண்டும் என்றார்.இப்போது இந்த ஆசிரியரைப்பற்றி நினைத்தால் பக்கத்து வீட்டுத்தாத்தா அந்த நாட்களில் ஒலிநாடாவை ஓடவிட்டு அடிக்கடி கேட்டு மகிழும் “நீயே உனக்கு என்றும் நிகரானவன்” என்ற பாடல் நினைவலைகளில் வந்து தவழ்ந்து செல்கிறது.-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *