ChatGPTக்கு தடைவிதித்த இத்தாலி
ChatGPT செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு இத்தாலி தடை விதித்துள்ளது. அவ்வாறு தடை விதித்த முதல் மேற்கத்திய நாடாகவும் அது திகழ்கிறது.
தரவுப் பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எந்த நேரத்திலும் எதைப் பற்றியும் கட்டுரை எழுத, விவரிக்க, ஆராய, பயனீட்டாளர்களுக்கு உதவுகிறது ChatGPT தொழில்நுட்பம்.
மனிதர்களைப் போலவே திறமையாகப் பதில் சொல்லும் திறமையும் அந்தத் தொழில்நுட்பத்திற்கு உண்டு.
இந்த நிலையில் ChatGPT தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் தரவுப் பாதுகாப்பு குறித்த தங்களது கேள்விகளுக்கு 20 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என இத்தாலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இல்லையென்றால் 21 மில்லியன் டாலருக்கும் மேல் அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
![]()