வாயை கொடுத்து வாங்கி கட்டிய ‘ஜெட் ஏர்வேஸ்’ தலைமை நிர்வாகி

ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சஞ்சீவ் கபூர், நம் நாட்டின் மெட்ரோ ரயில் நிலையங்களை, துபாயுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்ததையடுத்து, சமூக வலைதளங்களில் இளைஞர்கள் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சஞ்சீவ் கபூர். இவர், நம் நாட்டின் உட்கட்டமைப்பை துபாயுடன் ஒப்பிட்டு, தன் டுவிட்டர் சமூக வலைதள பக்கத்தில், புகைப்படத்துடன் கருத்து பதிவிட்டார்.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு: பெங்களூரு, குருகிராம், கோல்கட்டா மெட்ரோ ரயில் நிலையங்கள் ஏன் கலையற்ற கான்கிரீட் கண்மாய்களாக காட்சி தருகின்றன? பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தையும், துபாய் ரயில் நிலையத்தையும் ஒப்பிடுகையில், 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட துபாய் ரயில் நிலையம் எவ்வளவு அழகாக உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவுடன், நம் நாட்டின் மெட்ரோ ரயில் நிலையங்களின் புகைப்படங்களையும், துபாய் ரயில் நிலையங்களின் புகைப்படங்களையும் அவர் இணைத்துள்ளார். நம் நாட்டின் உட்கட்டமைப்பை விமர்சித்த சஞ்சீவ் கபூரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

‘சொந்த நாட்டைப் பாராட்டாதவர்களின் வழக் கமான பதில்’ என, ஒருவர் பதிவிட்டிருந்தார். மேலும் பலர், நாட்டின் வண்ணமயமான கட்டடக் கலைகளின் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து சஞ்சீவ் கபூருக்கு பதிலடி கொடுத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button