ஜாமீனில் வெளிவரமுடியாத அளவிற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்…!

நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், பிரதமராக இருந்தபோது கிடைத்த பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்ற வழக்கில் லாகூர் ஐகோர்ட்டு இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டை கடந்த மாத இறுதியில் பிறப்பித்தது. அதை தொடர்ந்து இம்ரான்கானை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது அவர் தலைமறைவானார். எனினும் அதன் பின்னர் தொலைக்காட்சி வாயிலாக தொண்டர்களுக்கு உரையாற்றிய இம்ரான்கான் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்தநிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு. பெண் நீதிபதி மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button