விபத்தினை ஏற்படுத்திய சாரதியை சட்ட வைத்தியரிடம் போதையில் அழைத்து சென்ற பொலிஸார்!

விபத்தினை ஏற்படுத்திய சாரதியை மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மது போதையில் இருந்தமை தொடர்பில் வைத்திய அதிகாரியினால் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிப்பர் வாகனம் மோதி துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் உயிரிழந்து இருந்தார்.

குறித்த விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட டிப்பர் சாரதியை மருத்துவ பரிசோதனைக்காக அச்சுவேலி பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்திய போது இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் மது போதையில் இருந்தமையை கண்டறிந்த சட்ட வைத்திய அதிகாரி அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அது தொடர்பில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராகவும் முதல் கட்டமாக திணைக்கள மட்ட  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button