இலக்கியச்சோலை

டாக்டர் ப.விக்கினேஸ்வரா முதல் ஆண்டு நினைவாக கவிஞர் தீபச்செல்வனின் நூல் வெளியீடு!

ஈழத்தின் இன்றைய முக்கிய இலக்கிய ஆளுமைகளில் தமிழ்த் தேசியத்திலும், தாய் மண்ணிலும் தீராப் பற்றுள்ள கவிஞர். தீபச்செல்வன் எழுதிய “பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகள் அல்ல” எனும் கட்டுரைத் தொகுப்பு டாக்டர் பரமநாதன் விக்கினேஸ்வரா அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இந்நூல் ஈழத்தில் வெளியிடப்படுகிறது.நூலாசிரியரின் முகநூல் பதிவில் :முதன் முதலில் ஈழத்தில் பதிப்பிக்கப்படும் நூல் என்ற வகையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். டாக்டர் பரமநாதன் விக்கினேஸ்வரா முதலாண்டு நினைவாக ஈழத்தின் குறிப்பிடத்தக்க பதிப்பகமான ஜீவநதி வெளியிடுகிறது.விரைவில் ஈழத்தில் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற இருக்கிறது. இந்த நூலிற்கு நடிகரும் நண்பருமான அன்பிற்குரிய நாசர் அவர்கள் சிறந்த அணிந்துரை வழங்கியிருப்பது கூடுதல் மகிழ்வான செய்தியாகும்.     – கவிஞர் தீபச்செல்வன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *