கவிதைகள்

வேறுமில்லை மறுப்பு!…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

வடித்த கவிதை என்ன?எழுதிய கதை என்ன?படைத்த கட்டுரை என்ன?எழுதியதோ என்னவென்ன?எழுதுவது நின்று போனால்இறுதியில் வருவதென்ன?இருக்கும்வரை எழுத்துஇறக்கும்வரை தொடர்ச்சிசெல்லும்வரை புகழ்ச்சிசென்றபின்னே யாதோசென்றபின்னே யாதோஎழுதும்வரை ஏக்கம்ஏற்றம் தரும் ஆக்கம்பண்பு மிகும் தாக்கம்பாதையோடு வருமா?இருக்கும்வரை எழுத்துஇறக்கும்வரை தொடர்ச்சிசெல்லும்வரை புகழ்ச்சிசென்றபின்னே யாதோசென்றபின்னே யாதோதொட்டிலுக்கு பேறுவட்டிலுக்கு சோறுகொட்டிலுக்கு ஏறுபட்டபின்னே வேறு இருக்கும்வரை எழுத்துஇறக்கும்வரை தொடர்ச்சிசெல்லும்வரை புகழ்ச்சிசென்றபின்னே யாதோசென்றபின்னே யாதோபடைத்தவனைக் கேட்டால்படித்துவிடு என்பான்படித்தவனைக் கேட்டால்படைத்துவிடு என்பான்படைத்துவிடு என்பான்இருக்கும்வரை எழுத்துஇறக்கும்வரை தொடர்ச்சிசெல்லும்வரை புகழ்ச்சிசென்றபின்னே யாதோசென்றபின்னே யாதோவட்டமிடும் ஆவிதிட்டமிடும் நீதிவிட்டுவிடும் இருப்புவேறுமில்லை மறுப்புஇருக்கும்வரை எழுத்துஇறக்கும்வரை தொடர்ச்சிசெல்லும்வரை புகழ்ச்சிசென்றபின்னே யாதோசென்றபின்னே யாதோ-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *