கவிதைகள்
பூ(பதிக்கு)வுக்கு ஒரு பூ(புகழ்) மாலை!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

பூக்களை நாடி வண்டுகள் பல வருவதுண்டுபூபதிக்கும் விருதுகள் வந்து குவிவதுண்டுநறுமலரை வண்டு நாடுவதும் வாடிக்கையேஅறுதியிட்டு கூறுவதிங்கு மிகையிலையேகாலை எழுந்தவுடன் படிப்பென்றான் பாரதிகாலை எழுந்தவுடன் படைப்பென்பார் பூபதிஆதவனே கிழக்கெழ காலம் பார்த்திருப்பான்தூதனாய் செய்தி கொடுப்பதில் முந்திடுவார்கணனி விசைப்பலகை ஓய்வை கேட்டாலும்கணநேரம் அவர் விரல்கள் அதை தந்திடாதுகுணமதையும் குறையெனக்கூறி நின்றிடாதமணம்வீசி தமிழ்மணம் பரப்பு தகையுடையன்ஓட்டத்தில் தமிழுக்காய் முன் ஓடிநிற்பவர்க்குதோட்டமாம் கனடா இலக்கிய தோட்டமதும்நாட்டமுடன் நயந்தளித்த விருதைக் கேட்டுகூட்டமாய் தமிழர் கொண்டாடி மகிழ்வோமே!-சங்கர சுப்பிரமணியன்.
![]()