இலக்கியச்சோலை

புதுக்கோட்டை எழுத்தாளருக்கு எழுத்து இலக்கியப் பரிசு!

மேனாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான எழுத்து அறக்கட்டளை திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசுக்காக 2021 ஆம் ஆண்டிற்கான நாவல் போட்டி நடத்தியது. இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் அண்டனூர் சுரா எழுதிய அன்னமழகி நாவல் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இம்மாதம் டிசம்பர் 31 அன்று சென்னை பி.டி தியாகராயர் அரங்கில்  நடைபெறும் ஒரு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் எழுத்தாளரைப் பாராட்டி  உரூபாய் இரண்டு இலட்சங்கள் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுப் பட்டயம் வழங்கவிருக்கிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *