கவிதைகள்

சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை!…. ( கவிதை ) … சங்கர சுப்பிரமணியன்.

தந்தனதத்தன தைய்யனத்தத்தன எனதோன்றிற்று பாடலுக்கு நல்ல ஊற்றுசிப்பி இருக்கு முத்தும் இருக்குதெனஊற்றில் வரிகள் பிறந்தன கவிஞரிடம்எத்தனைக் கிண்ணத்தில் இட்டாலும்மது அத்தனையும் சுவை ஒன்றேதான்எனக்கு அவர்கருத்து தந்தன ஓரூற்றுஎன்னுள் கருத்தாய் பிறந்தது கவிதைஎத்தனை வீடுகள் வாங்கி சேர்த்தாலும்அத்தனையிலும் நித்திரை ஒன்றில்தான்வீடுகள் நம்மோடு வருவதில்லை ஆனால்நித்திரை மட்டும் நம்மைத் தொடர்கிறதுஎத்தனை அணிகலன்கள் வாங்கினாலும்அவற்றுள் இருப்பதெலாம் பொன்னாகும்பொன்னை நம்மோடு அனுப்பிவைப்பரோஅவற்றை பார்க்க நம்மால் முடிந்திடுமோஎத்தனை பெண்களை நாம் சந்தித்தாலும்அத்தனைபேரும் ஒருதாய்க்கு ஈடாகுமோதாயன்புக்கு  இணையில்லை என்றாலும்அவ்வன்பை இறுதியிலுணர இயன்றிடுமாஇத்தனையும் இயல்பாய் தெரியும்போதிங்குமனிதரும் ஓய்வுன்றி எதைதோக்கி ஓடுகிறார்சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை – உன்சிந்தையில் தான் பேதமென நானறிந்தேன்!-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *