கவிதைகள்

ஒதுங்கிப்போ!… (கவிதை )

இருபத்தி ஒன்றுக்குப்பிறகுதான்
இல்லறம் என்று ஆகிப்போன நாட்டில்
இப்போதிருந்து என்னை
காதலிக்கச் சொல்லுகிறாயே ஏன்,?
ஓய்வாக இருக்கும்போது
உல்லாசக்கனவு காணவா,,?
உன்னைத்தவிர எவரையும் நான் உள்ளே அனுமதிக்ககூடாது என்பதாலா,,?
எனக்கு வேலை நிறைய இருக்கிறது.
உன்னைப்போல் ஊதாரியாய்த்திரிய
எனக்கு ஆசையில்லை,,!
ஒவ்வொரு புத்தகத்தையும் என்பெற்றோர்கள்
உதிரத்தைவிற்று ஊரெல்லாம் கடன்வாங்கி
படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதலீடு போட்டவர்களுக்கு முதலில் நான்
வட்டியைத் திருப்பித்தரவேண்டாமா,,?
ஒதுங்கிப்போ
உன் உல்லாசக் கனவுகளுக்கு
நான் உடன்படத் தயாரில்லை,,!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *