கவிதைகள்

வேரினில் நீரூற்ற வா வேலவா!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

தள்ளி அங்கேயே நிற்கும் வேலவாவள்ளியை மணம் முடிக்க இங்கு வாபிள்ளயாய் அன்று நின்றவனே நீ வாபிரணவம் சொன்னால் போதாது வாகூப்பிடுகிறார் உன்னை ஓடோடி வாஎப்பாடு பட்டாலாவது நீயும் இங்கு வாகூப்பாடு போட்டப்போ வராத நீயும் வாமூப்புவேடம் போட்டவனே இங்கே வாஒன்றிற்கிருவரை மணந்து காட்டிய நீ வாஎன்றைக்கும் ஒருத்தியொடு நான்வாழ வாகுன்றிலாடும் குமரனே குறமகளுடனே வாஅன்றே மறந்திட்டோம் அதை மறந்து வாகூர்வேலை எறிந்து பகையறுப்பவனே வாயார் மீதும் வேலறியாமல் நின்றவனே நீ வாபார் மீது உமைத் தொழுவோம் இங்கே வாஊரை மறக்கவைத்தாலும் உற்றவனே வாதேர்மீது பவணிவந்து தேவர் பகையறுக்க வாயாரெங்கு இருக்கிறார் என்று சொல்லவே வாபாரினில் இங்கு கேட்கிறார் பறந்திங்கு நீ வாவேரினில் நீரூற்றி வீறோடு தழைத்திடவே வா

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *