கிரகப்போர்!… 26 … காசியரின் பேரன்.

மூலைக்களங்களே உடலுக்கு முக்கியமனது.பூமியிலிருந்து கடந்தப்பட்ட சாமியும் சுந்தரியும் அடுத்து என்ன நடக்கப் போகிறது, எங்களைக் கடத்திய வேற்றுக்கிரக வாசிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற ஒருவிதமான திகில் அவர்களுக்கு இருந்த போதிலும் ஆறு போகும் வழியில் இழுபட்டுப் போவது போல வேற்றுக்கிரக வாசிகள் இழுத்த இழுவைக்குப் போய்க் கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் பயம் என்றால் என்னவென்று அறியாத நிலைக்கு வந்துவிட்டார்கள்.
பய உணர்ச்சிதான் எல்லா முயற்சிகளுக்கும் தடையாக இருப்பவை.மிக உயரத்தில் இருக்கும் ஒருவர் தான் விழுந்துவிடுவேனோ என்றோ அல்லது விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைக்கும் போது அவரின் இதயம் வேகமாகத் துடிப்பதுடன் கைகால்கள் நடுங்கத் தொடங்கிவிடும்.
ஒரு விமானம் மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது அதுவும் அட்லாண்டிக் சமுத்திரத்திற்கு மேலாகவோ அல்லது பசுபிக் சமுத்திரத்திற்கு மேலாகவோ பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தின் யன்னல் ஓரமாக உட்கார்ந்திருக்கும் ஒருவர் அதிலும் அவர் இயல்பாகவே உயரங்களில் இருக்கும் போது பயப்படுபவராக இருப்பாராயின்,
யன்னலுக்கூடாக அந்தச் சமுத்திரத்தை அவர் பார்க்கையில் சமுத்திரத்தின் நிறமும்,அங்கு பயணித்தக் கொண்டிருக்கம் கப்பல்கள் நெருப்புப் பெட்டியளவு தோற்றத்தில் தெரியும் போது நாங்கள் மிக மிக உயரத்திலிருக்கிறோம்,தற்செயலாக இந்த விமானம் பழுதடைந்து இந்தச் சமுத்திரத்தில் விழுந்துவிட்டால்; விழுந்த வேகத்தில் சமுத்திரத்தின் அடியாழத்திற்குப் போய் இதில்: பிரயாணம் செய்து கொண்டிருக்கும் நாமெல்லாரும் இறந்து விடுவோமே என்று அவர் கற்பனை பண்ணினால்கூட அவரால் நிம்மதியாக விமான இருக்கையில் இருக்க முடியாது.
அதற்கு காரணம் பய உணர்ச்சியேயாகும்.எவ்வளவோ தொiழில்நுட்ப பயிற்சிகள் கொடுத்தும், பயம் போக்கும் மனதுணிச்சலைக் கொண்டு வரும் பயிற்சிகளைக் கொடுததும்,ஒரு குறிப்பிட்ட பலவாயிரம் மீற்றர் உயரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்கைலாப் என்ற ஆய்வு கூடத்திற்கு ஏவுகணை வழியாக அனுப்பட்டு அதனைச் சென்றடையும் விஞ்ஞானிகளாகட்டும் அல்லது அங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளாகட்டும் என்னதான் அவர்கள் பயிற்சி பெற்றவர்களாக இருந்த போதிலும் தற்துணிச்சலும் சாவு வந்தால் வரட்டும் என்ற மன உறுதி கொண்டவர்களால் மட்டுமே அங்கு பயமின்றி பணிபுரிவது மட்டுமின்றி பிரபஞ்சத்தை நோக்கி ஏவுகணையை ஏவியபின் அது தொழில்நுட்பக் கோளாறினாலோ அல்லது பிரபஞ்ச பவன அழுத்தத்தினாலோ வெடிக்கலாம் தமது உயிரும் போகலாம் என்ற நினைப்பை அகற்றி தாங்கள் பாதுகாப்பாக போய்ச்சேருவோம் என்று அவர்களின் பெரும் நம்பிக்கையே அவர்களை பிரபஞ்சத்தில் அந்தரத்தில் உலாவவும் பணிபுரிய வைக்கும் மனத்திடத்தைக் கொடுக்கின்றது.
தம்மை தம் வீட்டிலிருந்து கூட்டிச்செல்ல வந்த ஆணும் பெண்ணும் மனித உருவில்: இருந்தமை சாமிக்கும் சுந்தரிக்கும் ஆறுதலாக இருந்தது.
அவர்களுக்கிருந்த பயம் உணர்ச்சியை பச்சைக்கிரக வாசிகளே போக்கியதை அவர்களால் அறிய முடியவில்லை.
மயக்க மருந்து செலுத்தப்பட்டு சத்திரசிகிச்சைக்கு கொண்டு செல்லப்படும் ஒருவர் மருத்துவரிடம் உரையாடிக் கொண்டே மயங்குவது தெரியாமல் மயங்கிவிடுவார்.
அது போல்தான் சாமியும் சுந்தரியும் தமக்கிருந்த பய உணர்ச்சி தங்களிடமிருந்து நீங்கியதை அவர்களால் உணரமுடியவில்லை.பச்சைக் கிரக வாசிகள் சாமி சுந்தரி ஆகிய இருவரின் மூளைக்கலங்களிருந்தும் பய உணர்வு வேதியல் பொருளையும் அதனை உடல் முழுதும் கடத்துகின்ற நுண்ணிய நரம்பு இழைகளையும் தமது தொழில்நுட்ப ரீதியாக அகற்றியதை அவர்களாலேயே அறிய முடியவில்லை.
பூமியிலிருந்த போது அவர்களுக்கு வாரிசாக பிள்ளைகள் எதுவுமே இல்;லை.ஆனால் அவர்களுக்கு மீண்டும் திருமணம் போன்ற ஒரு சடங்கு வேற்றுக் கிரகத்தில் நடத்தப்பட்டு,அவர்களுக்கு முதலிரவும் நடந்து இப்பொழுது சுந்தரி கர்ப்பமாக இருக்கிறாள்.
பச்சைக் கிரகத்தின் கட்டுப்பபாட்டில் பலநூறு கிரகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.ஒவ்வொரு கிரகவாசிகளும் சாமியையும் சுந்தரியையும் அங்கனக்கா, நண்டுங்கா என்ற கிரகங்களுக்கு அவர்களைக் கூட்டிச் சென்று இப்பொழுது வைரிக் கிரகத்தினால் உருவாக்கப்பட்ட பூமியைவிட பெரிதான ஒரு செயற்கைக் கிரகத்திற்குள் செல்வதற்காக அதன் நுழைவாயிலைக் கடந்து ஒரு வீடு போன்ற ஒன்றுக்குள் கூட்டிச் செல்லப்படுகின்றனர்.
நாமறிந்து கொண்ட கிரகங்கள் உட்பட பூமிவரை அவற்றின் மேற்பரப்பிலேயே எல்லாம் இருந்தன.
ஆனால் வைரிக் கிரகத்தினால் உருவாக்கப்பட்ட இக்கிரகத்தின்: மேற்பரப்பு ஒருவித உலகத்தகடுகளின் அடுக்குகளால் உருவாக்கப்பட்டிருந்தது.
உள் பகுதி சதை நீக்கப்பட்ட விளாம்பழத்தின் உட்பகுதி போல இருந்த போதிலும் பூமியின் மேற்பரப்பில் காணப்படுகின்ற அத்தனையும் அங்கே இருந்தன.
பூமியின் மேற்பரப்பில் ஒரு இடத்திலிருந்து பார்த்தால் பூமிக்கு மேல் ஆகாயத்தை கிண்ணம் போல கவிழ்த்து வைத்தது போலத் தெரியும்.
அதைப் போலவே இச்செயற்கைக் கிரகத்தின் உட்பகுதி சாமியின் கண்களுக்கும் சுந்தரிக்கும் எல்லையற்ற நீண்டு கொண்டே செல்கின்ற நிலப்பரப்பாகத் தெரிந்தது.
மேலே பார்க்கின்ற போது நிலபரப்பின் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் காண முடியவில்லை.அது ஒரு புகைமூட்டம் போல தெரிந்தது.கற்பனை செய்யக்கூட முடியாத உயரமாக உட்பகுதி இருந்தது.
சாமியையும் சுந்தரியையும் இந்த செயற்கைக் கிரகத்துக்குள் கூட்டிக் கொண்டு வந்த விஞ்ஞானிகள் இது தமது கிரகமான வைரிக் கிரகத்தால் உருவாக்கப்பட்ட
செயற்கைக் கிரகம் என்பதைச் சொன்ன போது அதனை அவர்களால் நம்ப முடியவில்லை.
அந்தப் பிரமாண்ட கிரகத்தைப் பார்த்து அவர்கள் பயம் கொள்ளவில்லை.
இந்தச் செயற்கை; கிரகம் முட்டை வடிவிலானது.முன்னோக்கி மேலாகச் சுழன்று கொண்டிருந்தது.சாமியும் சுந்தரியும் தொடர்ந்து அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாலோ அல்லது நடந்து கொண்டிருந்தாலோ அவர்களும் அவர்களையறியாமலோ சுழன்று கொண்டிருக்கிறார்கள் என்பதாகும்.
சூரியனைச் சுற்றி வந்தபடியே பூமி தன்னைத்தானே சுற்றியும் வருகின்றது.பூமி வேகமாகவே தன்னைத்தானே சுற்றுகின்றது என்பதை பூமியின் பிரமாண்டமான கோள வடிவமும் பூமியின் ஈர்ப்பு விசையும் பூமியின் வேகத்தை எமக்கு உணர வைப்பதில்லை.பகலில் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியில் இருப்பதும் இரவில்; நாம் இன்னொரு பகுதியில் இருப்பதையும் நாம் உணர்வதில்லை.
பூமி தன்னைத்தானே சுற்றும் போது ஒவ்வொரு விநாடிப் பொழுதும் நாம் பிரபஞ்சத்தின் இன்னொரு பகுதியை கடந்து கொண்டிருக்கிறோம் எனபதே உண்மையாகும்.மீண்டும் கடந்த இடத்திற்கு வந்து மீண்டும் கடந்து போகிறோம்.
அதற்கு எளிய உதாரணமாக ரங்கராட்டினம் கிடைநிலையில் சுறஇறுவதாக வைத்துக் கொண்டால் அந்த ராட்னத்தின் கூடு போன்ற இருக்கையில் உட்கார்ந்து இருக்கும் ஒருவர் தனது இருககைத் திசையில் ஒரு மரம் இருப்பதைப் பார்க்கிறார்.
ரங்கராட்டினம் சுற்றப்படுகையில் அவரின் பார்வையிலிருந்து மரம் மறைந்து இன்னொரு திசையில் அவர் இருப்பதும் சுற்றுதல் தொடரும் போது மீண்டும் மரத்தை அவர் பார்ப்பதும் மீண்டும் அமரம் மறைவதுமாக இருக்கும்.
ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு காட்சிகளை அவர் பார்ப்பதும் மறைவதும் பார்ப்பதுமாகத் தொடர்கின்றது.பூமி சுற்றுவதும் இவ்வாறேயாகும்.
ஒரு திசையைக் கடந்து அடுத்த திசைத் தொடருக்குப் போகும் பூமிச் சுற்றல் மீண்டும் கடந்து சென்ற திசைக்கு வந்து மீண்டும் கடந்து செல்கின்றது.
இது போன்றுதான் வைரிக் கிரகத்தினால் செயற்கையாக உருவாக்கப்பட்ட உலோக மேற்பரப்புக் கொண்ட கிரகம் தன்னைத்தானே உட்பக்கமாகச் சுற்றுகின்றது.
மனம் நினைப்பதை செயல்படுத்தும் திறன் இக்கிரகத்தில் இருக்கின்றது.
(தொடரும்)
![]()