கவிதைகள்

கந்தசஷ்டிப் பிரார்த்தனை!… [ 6 ம் நாள் ] …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

ஆறிரு தடந்தோள் ஐயா போற்றி 

அருமறை போற்றும் முருகா போற்றி

கூறுசெய் வடிவேல் குமரா போற்றி 

குன்றுகள் தோறும் அமர்ந்தாய் போற்றி

 

மாறில்லா வள்ளி மணாளா போற்றி

மஞ்சையில் ஏறி வருவாய் போற்றி 

குக்குடக் கொடியை உடையாய் போற்றி

குவலயம் உய்ந்திட உதித்தவா போற்றி 

  

முருகா போற்றி மால்மருகா போற்றி

உருகிடும் அடியார் உளமுறைவாய் போற்றி

பொருதிடு குணத்தை ஒழிப்பாய் போற்றி

புவனமே போற்றிடும் குமரா போற்றிபோற்றி.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *