கவிதைகள்

பாட்டி சொன்ன கதை!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

அன்பு ஆசை காதல் என்ற மூன்றுக்கும்அடிப்படை வேறுபாடறியா வயதெனக்குஅன்போடு அரவணைத்த பாட்டியும் அவள்கேட்டறிந்த கதை சொன்னாள் என்னிடம்எத்தனையோ அரசர் வந்து முயன்றனர்அத்தனை பேராலும் தூக்கமுடியா வில்லைமெத்தனமாய் வந்து தூக்கி ஒருவர் ஒடிக்கசித்திரமாய் நின்றவள் சிந்தையலங்கு காதல்எனக்கோ வளைக்கமுடியா வில்லொடித்ததுநினைக்க வியப்பானதே அசாத்திய வீரமாய்நினைத்தேன் பளுதூக்கும் போட்டியை நான்அன்றொரு விதியை வரையறுக்கவில்லையாகதை சொன்ன பாட்டியிடம் கேட்கவில்லைஇதைக்கேட்கும் வயதும் அப்போது இல்லைவிதையை நிலமறிந்து ஊன்றிடல் வேண்டும்ஏதுமறியா வயதில் ஊன்றினாலது கதையாம்வீரத்தை சொல்ல முயன்றாளா எனது பாட்டிதாரமாய்வர நின்றவள் காதலை சொன்னாளாநூறு கதைகள் இதுபோல் கேட்டேன் அன்றுசீராய் புதிதாக தோன்றின பற்பலவும் இன்று!-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *