கவிதைகள்

கந்தசஷ்டிப் பிரார்த்தனை!…. [ 5 ம் நாள் ] …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

பழமான முருகாநீ பழந்தேடி நின்றாய் 

பழனிப் பதியமர்ந்து பக்குவமாய் ஆனாய்

அழகான இருமாதர் அருகணைத்துக் கொண்டாய்

அரனாரின் திருக்குமரா திருவடியே சரணம் 

 

வண்ணமயக் காவடிகள் வருமுந்தன் வாசல் 

வாலைக் குமரியொடு வாலிபரும் வருவார்

எண்ணமெலாம் உன்நினைப்பை இருத்திவைக்கும் அடியார்

எழில்முருகா எனப்பாடி  ஏற்றிநிற்பார் உருகி 

 

கண்களிலே பரவசத்தைக் காட்டிநிற்கும் அடியார்

கைகூப்பி வேல்முருகா எனவுருகி அழைப்பார் 

மண்புரள வீதியிலே வருமடியார் கூட்டம்

மால்மருகா எனவுரைத்து உனைநினைத்து வருவார்.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….அவுஸ்திரேலியா. 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *