டி20 உலக கோப்பை….. பாகிஸ்தானை ஒரு ரன்னில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஜிம்பாப்வே!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது. சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டும், ஷதாப் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் 4 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 15 ரன்னிலும் அவுட்டாகினர். இப்திகார் அகமது 5 ரன்னிலும், ஷதாப் கான் 17 ரன்னிலும் அவுட்டாகினர்.

பொறுப்புடன் ஆடிய ஷான் மசூத் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹைதர் அலி டக் அவுட்டானார்.

இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே திரில் வெற்றியை பதிவு செய்தது. ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியாவுக்கு 2-வது வெற்றி: நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!….

நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்தது.

ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் அரை சதம் அடித்தனர். இதனை தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது.

இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நெதர்லாந்து அணி திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு இது 2-வது வெற்றி ஆகும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button